தேவேந்திரன் "ந..மீ..தா.."என்று அலறியது அந்த நடன அரங்கு மட்டுமல்ல அதையும் தாண்டிக் கையிலை எங்கும் ஒலித்தது.உடனே அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த பூத கணங்களும் சிவனடியார்களும் விரைந்து சபையில் கூடினர்.தங்களது வழக்கமான பணிகளைச் சிரமேற்கொள்ள ஆரம்பித்தனர்.அதாவது வேத மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்தன.ஓம் நமசிவாய கோஷங்கள் முழங்கின.பரமசிவனும் திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்து சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தார்.
"வா முருகா. நீ போட்ட கணக்கிற்குத் தான் விடையை யோசித்துக் கொண்டிருந்தேன்.நீ சொன்ன காலக்கெடு முடிந்துவிட்டதா?அந்தி சாயும் நேரமாயிற்றா?எங்கே உமையன்னை? என்னைத் தனியே விட்டுவிட்டு யோசிக்கச் சென்றாளே.அம்மையைப் பார்த்தாயா?விடை கண்டுபிடித்துவிட்டாளாமா?என்று அடுக்கடுக்காகக் கேட்டுக்கொண்டே வந்தவர் நாரதரைப் பார்த்தார்.
"என்ன நாரதா.நலந்தானா.வைகுண்டத்தில் என் மைத்துனைர் நலமா?"என்றார்.
முருகப்பெருமானும் நாரதரும் பரமசிவனை வணங்கினார்கள்.
"வைகுந்தத்தில் உங்கள் மைத்துனர் உள்பட அனைவரும் நலந்தான்" என்றார் நாரதர்.
"ஐயனே.நான் வந்து வெகு நேரமாகிறது.நீங்கள் ரொம்பத் தான் யோசனையில் ஆழ்ந்துவிட்டீர்கள்.வாருங்கள்.இருக்கைக்குச் செல்லலாம்."என்றார் முருகப் பெருமான்.
"ஆகட்டும்.அதுசரி..என்னமோ நமீதா நமீதா நமீதா என்று பலமுறை கூக்குரல்கேட்டதே.என்ன அது?"என்று வினவினார்.
"அது ஒன்றுமில்லை.உங்களைக் காணத் தேவேந்திரனும் வந்திருக்கிறான்.அவனும் வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறான்.அதோ உமையன்னையின் காலடியில் விழுந்து கிடப்பதைப் பாருங்கள்.அவன் தான் அப்படி அலறினான்."
முருகப் பெருமான் இவ்வாறு கூறியதும் பரமசிவன் திரும்பிப் பார்த்தார்.தேவேந்திரன் உமையன்னையின் காலடியில் விழுந்து கிடப்பதைக் கண்ணுற்றார்.அனைவரும் அங்கே சென்றனர்.
"தேவேந்திரா.என்ன இது?எழுந்திரு.என்ன ஆயிற்று உனக்கு" என்று ஆறுதல் கூறியவாறே பரமசிவன் தேவேந்திரனைத் தூக்கி எழுப்பினார்.
தேவேந்திரன் எழுந்து பரமசிவனின் காலடியில் மீண்டும் விழுந்தான்."ஐயனே,அப்பனே,கருணைக் கடலே.ஊழியும் நீயே.உலகும் நீயே.காலமும் நீயே.அனைவர்க்குக் காலனும் நீயே.உங்களைக் கண்டு என் பிரச்சனையைச் சொல்லித் தீர்வு காணவே வந்தேன்."
"அதுசரி.என்னமோ நமீதா.. நமீதா..என்று அலறினாயே..என்ன விஷயம்?".
அப்போது தான் தேவேந்திரனுக்கே உறைத்தது.
"அது வந்து...நீங்கள் ஏதோ நிஷ்டையில் இருந்தீர்களா.முருகப் பெருமான் நாரதர் நான் அனைவரும் வந்து வெகு நேரமாகியும் நீங்கள் சுய நினைவுக்கு வந்தபாடில்லை.அம்மையும் அவ்வாறே அமர்ந்திருந்தார்கள்.தற்செயலாக அம்மை என்னைப் பார்த்து 'வா தேவேந்திரா' என்ற பிறகு நான் உங்களைப் பார்த்தேன்.அப்போதும்கூட நீங்கள் சுயநினைவுக்கு வந்தபாடாகத் தெரியவில்லை.எனவே தான் "நமசிவாயத்தை மீட்டுத் தாருங்கள்"என்று அம்மையிடம் சொல்ல வந்தேன்.அவ்வளவு நீளமாகச் சொல்வதற்குப் பதிலாகச் சுருக்கமாக ந..மீ..தா..என்று கத்திக் கொண்டே அம்மையின் காலடியில் விழுந்து விட்டேன்.என் எண்ணத்திலோ செயலிலோ பிழை இல்லை.இருந்தாலும் என்னை மன்னித்தருள வேண்டும்.
நாரதர் தேவேந்திரனைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்.
Astrology: எட்டாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்
-
*Astrology: எட்டாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்*
8th House and placement benefit of its lord
கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள்...
1 day ago
2 comments:
hahahahaha... room pottu yosipeengalo ?! ;-)
வாங்க யாத்திரீகன்.ரூம் ஒண்ணும் போடவில்லை.அப்படியே போற போக்கிலே எழுதிகிட்டே போறது தான்.
Post a Comment