வாசற்படியிலேயே உட்கார்ந்துவிட்டான் தேவேந்திரன்.'இருவரும் என்னத்தைக் கணக்குப் பண்ணி என்னத்தை விடை கண்டுபிடித்து எப்போது முருகனிடம் சொல்லி....ஹூம்.இன்றைக்கு வந்த காரியம் முடிந்தமாதிரி தான்' என்று நினைத்துக் கொண்டான்.
நாரதரைப்பார்த்தான்.அவரோ கையில் இருக்கும் தும்புராவை லேசாக மீட்டிய வண்ணம் இருந்தார்.வாயோ நாராயணா நாராயணா என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
"நாரதரே."
"என்ன தேவேந்திரா."
"நாராயணரைத் துதி பாடியது போதும்.இங்கே வாருங்கள்."
"வந்துவிட்டேன்.என்ன விஷயம்?"
தேவேந்திரனுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.இருக்காதாபின்னே?கூப்பிட்டகுரலுக்கு உடனே ஓடி வருகிறாரே இந்த நாரதர்!
"சரி.சரி.அங்கேயே போய் நில்லும்."
"சரி.தேவேந்திரா.அப்படியே ஆகட்டும்."
இப்போது தேவேந்திரனுக்கே இது கொஞ்சம் அதிகம் போலத் தெரிந்தது.
அவனே நாரதரின் அருகில் சென்றான்.
"நாரதரே."
திடுக்கிட்டுக் கண் விழித்தார் நாரதர்.
"என்ன தேவேந்திரா?"
"இல்லை.நாம் வந்து வெகு நேரம் ஆகிறது.அம்மையும் அப்பனும் எப்போது நம்மைக் கூப்பிடுவார்கள்?"
"அதுதான் நந்தி தேவரே சொல்லிவிட்டாரே,இருவரும் முருகப்பெருமான் போட்ட கணக்கிற்கு விடை கண்டுபிடித்தபிறகுதான் நம்மைக் கூப்பிடுவார்கள்."
"ஆடவல்லானுக்குத் தெரியாத கணக்கா நாரதரே?"
"இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்."
தேவேந்திரன் யோசிக்க ஆரம்பித்தான்.'அப்படி என்ன கணக்காக இருக்கும்?நான் தான் பிரம்மத்தை முற்றிலும் உணர்ந்தவர்களில் ஈரேழு பதினான்கு லோகங்களிலும் முதன்மையானவன் ஆயிற்றே.என்னைக் கேட்டாலே ஒரு நொடிப் பொழுதில் விடை கண்டு விடுவேனே!
இப்படியே காத்துக்கொண்டிருப்பதிலேயே நாள் முழுதும் போய் விடுமோ'என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.
அப்போது முருகப் பெருமான் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்.தேவேந்திரனும்,நாரதரும் அவசர அவசரமாக வணங்கினார்கள்.
முருகப் பெருமான் சிரித்தார்.
என்ன தேவேந்திரா.நலந்தானா?கணக்கு என்னவென்று சொல்லவா?விடை சொல்கிறாயா?
தேவேந்திரனுக்கு விதிர்விதித்துவிட்டது.
முருகப் பெருமானே.என்னை மன்னிக்க வேண்டும்.பிரம்மத்திற்குப் பொருள் கூறியவரே தாங்கள் தான்.நான் பார்க்கவந்த காரியம் தாமதப் பட்டுப் போகிறதே என்ற அச்சம் என்னை அவ்வாறு எண்ண வைத்து விட்டது.அடியேனை மன்னித்தருள வேண்டும்.
பரவாயில்லை.வாருங்கள்.அப்பனையும் அம்மையையும் காண்போம்.பிறகு என் கணக்கிற்கு விடை காணலாம்.
இவ்வாறு முருகப் பெருமான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாயிற்கதவுகள் திறந்தன.உள்ளே இருந்துவந்த பூதகணம் ஒன்று நந்தியிடம் ஏதோ முணுமுணுத்தது.உடனே நந்தி அனைவரையும் உள்ளே செல்ல அனுமதித்தார்.
Astrology: வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.
-
*Astrology: வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள். *
Portfolio of 12 houses
புதிதாக வந்த மாணவக் கண்மணி ஒருவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். 12
வீடு...
19 hours ago
2 comments:
Yenna type kadhainga idhu ? :-))) but suvarasiyamaana nadai ..
வாருங்கள் யாத்திரீகன்.நகைச்சுவை,நையாண்டி வகையைச் சேர்ந்தது.அங்கதச் சுவையும்(satire)சேர்ந்தது.நன்றி.
Post a Comment