சாலை விபத்தில் தேவேந்திரனும் நாரதரும் அகால மரணம்.

அங்கமுத்துவுடன் சென்ற தேவேந்திரனும் நாரதரும் வெளியே நின்றுகொண்டிருந்த காரில் ஏறிக்கொண்டார்கள்.அண்ணாசாலையை நெருங்கியபோது எதிரே வேகமாக வந்த தண்ணீர் லாரி இவர்களின் காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் கார் அப்பளமாக நொறுங்கியது.தேவேந்திரனும் நாரதரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அங்கமுத்து சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
அந்த வினாடியே அங்கு தோன்றிய சாத்தான் இருவரின் உயிர்களையும் தன்னகத்தே வாங்கிக் கொண்டு அவர்களைப் போலவே தேவ உருக்கள் கொண்டு தேவலோகம் சென்றான்.

முற்றியது.

பின்னுரை:மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வலைப்பதிவர் அனுராதாவின் கணவன் நான்.

நோயின் கொடுமையை மறப்பதற்காக அவளிடம் தினமும் பல நகைச்சுவை கலந்த கதைகளைச் சொல்வேன்.அப்போது தோன்றியது தான் இந்தக் கதையும்.தற்போது அனுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.கிட்டத்தட்ட சுயநினைவு இழந்த நிலையில் இருக்கிறாள்.கதைசொல்லும் நிலையில் நானோ,கேட்கும் நிலையில் அவளோ நிச்சயமாக இல்லை.இந்நிலையில் இந்தத் தொடரைத் தொடர்ந்து எழுத முடியாத நிலைமையில் உள்ளேன்.தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படும்.அதற்கான காலம் கனியும்.அப்போது தொடர்கிறேன்.

இந்தத் தொடரை நான் பணி புரிந்த ஊரான திண்டுக்கல்லைச் சேர்ந்த சக வலைப் பதிவரான சரவணன் என்கிற உண்மைத் தமிழன் அவர்களுக்கும்,சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மற்றுமொரு சக வலைப் பதிவரான கிருஷ்ணகுமார் என்கிற லக்கிலுக் அவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்.நேரமும் காலமும் ஒத்துழைத்தால் பின்னொரு நாளில் இவர்களைச் சந்திப்பேன்.

8 comments:

செந்தழல் ரவி said...

நல்ல பதிவு உண்மைத்தமிழன்...!!!!

அமர பாரதி said...

சர்தார் அவர்களே,

ஆண்டவன் உங்களுக்கு இதை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை அளிக்க பிரார்த்திக்கிறேன். உங்கள் மனைவி விரைவில் முழு நலம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

யாத்ரீகன் said...

:-( .. என்ன சொல்வதென்றே தெரியவில்லை .. வயதில் சிறியவன் நான், உங்களுக்கு தெரியாததா சொல்லிவிடப்போகின்றேன்.. உங்கள் துக்கத்தில் பங்குகொள்கின்றேன்.. மீண்டும் வாருங்கள்.. மீண்டு வாருங்கள் ..

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

வாங்க செந்தழல் ரவி.கூடிய விரைவில் பெங்களூரு வந்து உங்களைச் சந்திக்கத்தான் போகிறேன்.அப்போது நான் உண்மைத்தமிழன் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறீர்கள்.நன்றி.

வாங்க அமர பாரதி,யாத்ரீகன். நன்றி.

விஜய்கோபால்சாமி said...
This comment has been removed by the author.
சிங். செயகுமார். said...

Sir Gd evening
Am jayakumar from sg. Already talkover to u while u r in india
Send me email or just give call.
thankz
urs evr
singh.jayakumar(83191836)

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in