அங்கமுத்துவுடன் சென்ற தேவேந்திரனும் நாரதரும் வெளியே நின்றுகொண்டிருந்த காரில் ஏறிக்கொண்டார்கள்.அண்ணாசாலையை நெருங்கியபோது எதிரே வேகமாக வந்த தண்ணீர் லாரி இவர்களின் காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் கார் அப்பளமாக நொறுங்கியது.தேவேந்திரனும் நாரதரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அங்கமுத்து சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
அந்த வினாடியே அங்கு தோன்றிய சாத்தான் இருவரின் உயிர்களையும் தன்னகத்தே வாங்கிக் கொண்டு அவர்களைப் போலவே தேவ உருக்கள் கொண்டு தேவலோகம் சென்றான்.
முற்றியது.
பின்னுரை:மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வலைப்பதிவர் அனுராதாவின் கணவன் நான்.
நோயின் கொடுமையை மறப்பதற்காக அவளிடம் தினமும் பல நகைச்சுவை கலந்த கதைகளைச் சொல்வேன்.அப்போது தோன்றியது தான் இந்தக் கதையும்.தற்போது அனுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.கிட்டத்தட்ட சுயநினைவு இழந்த நிலையில் இருக்கிறாள்.கதைசொல்லும் நிலையில் நானோ,கேட்கும் நிலையில் அவளோ நிச்சயமாக இல்லை.இந்நிலையில் இந்தத் தொடரைத் தொடர்ந்து எழுத முடியாத நிலைமையில் உள்ளேன்.தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படும்.அதற்கான காலம் கனியும்.அப்போது தொடர்கிறேன்.
இந்தத் தொடரை நான் பணி புரிந்த ஊரான திண்டுக்கல்லைச் சேர்ந்த சக வலைப் பதிவரான சரவணன் என்கிற உண்மைத் தமிழன் அவர்களுக்கும்,சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மற்றுமொரு சக வலைப் பதிவரான கிருஷ்ணகுமார் என்கிற லக்கிலுக் அவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்.நேரமும் காலமும் ஒத்துழைத்தால் பின்னொரு நாளில் இவர்களைச் சந்திப்பேன்.
Astrology: திருமண வாழ்க்கை! முக்கிய விதிகள்.
-
*Astrology: திருமண வாழ்க்கை! முக்கிய விதிகள். *
திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான
நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.
கிரேக்க...
1 hour ago